முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் திரு.A.P.J.அப்துல் கலாம் அவர்கள் பிறந்ததினம்!.
Former President Dr A P J Abdul Kalams birthday
இந்திய ஏவுகணை நாயகன், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் திரு.A.P.J.அப்துல் கலாம் அவர்கள் பிறந்ததினம்!.
இந்திய ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் பிறந்தார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த இவர் 1980ஆம் ஆண்டு SLV-III ராக்கெட்டை பயன்படுத்தி ரோகிணி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இந்தியாவிற்கே பெருமை சேர்த்தார்.
இவர் பத்மபூஷண்(1981), பத்மவிபூஷண்(1990), பாரத ரத்னா (1997) போன்ற விருதுகளை பெற்றுள்ளார். இவருடைய அக்னி சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள் ஆகிய புத்தகங்கள் புகழ் பெற்றவைகள்.
1999ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றினார். 2002ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11வது குடியரசு தலைவராக ஜூலை 25, 2002ல் பதவியேற்றார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் 2015ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி மறைந்தார்.

திரு.மருதநாயகம் பிள்ளை அவர்கள் நினைவு தினம்!.
மதுரையை ஆண்ட மாமன்னர் ஆற்காடு படை வீரா் "கமாந்தோ கான்" 'மாவீரன்' திரு.மருதநாயகம் பிள்ளை அவர்கள் நினைவு தினம்!.
மருதநாயகம் பிள்ளை (Maruthanayagam Pillai) என்றழைக்கப்பட்ட முகமது யூசுப் கான் ஆர்க்காட்டு படைகளில் போர் வீரராகவும், பிற்காலத்தில் கிழக்கிந்திய படைகளுக்கு படைத்தலைவராகவும் விளங்கினார். 1725 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் பனையூரில் சைவவெள்ளாளர் குடும்பத்தில் பிறந்தார். ஆங்கிலேயரும், ஆர்க்காட்டு நவாப்புகளும் தமது எதிரிகளான தமிழகத்தினைச்சேர்ந்த பாளையக்காரர்களுக்கு எதிராக மருதநாயகத்தினை போரில் ஈடுபடச்செய்தனர்.
பிற்காலங்களில் மதுரை நாயக்கர்களின் ஆட்சி முடிவடையும் காலகட்டத்தில் மதுரையை ஆளும் அதிகாரத்தினை ஆங்கிலேயர் இவருக்கு அளித்தனர். தம் வாழ்நாளின் இறுதியில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியாளர்களுக்கு எதிராக செயல்பட்டார். அக்டோபர் 15 ஆம் தேதி 1764 ஆம் ஆண்டில் மதுரை சம்மட்டிபுரம் பகுதியில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிப்பட்டார் மருதநாயகம் பிள்ளை.
English Summary
Former President Dr A P J Abdul Kalams birthday