இன்னாள் சார்பு ஆய்வாளர் மீது முன்னாள் சார்பு ஆய்வாளர் பரபரப்பு புகார்! - Seithipunal
Seithipunal


காவல்துறையில் ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் ஒருவர் பணியில் இருக்கும் சார்பு ஆய்வாளர் மீது புகார் அளித்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற உத்தரவுப்படி கடமலைக்குண்டு சார்பு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஓய்வு சார்பு ஆய்வாளர் டி.எஸ்.பியிடம் மனு அளித்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள எம்.சுப்புலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன்.இவர் தமிழ்நாடு காவல்துறையில் சார்பு ஆய்வாளராக பதவி வகித்து ஓய்வு பெற்றுள்ளார்.கடந்த 2022ஆம் ஆண்டு இடப்பிரச்சனை காரணமாக கோவிந்தராஜ் வீட்டிற்கு அருகே வசிக்கும் விஜயராஜேஸ்வரி என்பவர் அடியாட்களுடன் கோவிந்தராஜனின் வீட்டை அடித்து உடைத்து மிரட்டல் விடுத்ததாக கண்டமனூர் காவல் நிலையத்தில் கோவிந்தராஜ் புகார் கொடுத்திருந்தார். 

      அப்போது கண்டமனூர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றிய  பிரேம் ஆனந்த் என்பவர் இந்த வழக்கை விசாரித்து வந்துள்ளார். கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை கோவிந்தராஜனின் கவனத்திற்கு கொண்டு வராமல் அவருடைய கையெழுத்தை போலியாக போட்டு வழக்கை முடித்ததாக கூறப்படுகிறது.

      இதனால் அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜன் இது குறித்து தேனி மாவட்ட எஸ்பி, திண்டுக்கல் சரக ஐஜி, டிஜிபி ஆகியோரிடம் புகார் மனு கொடுத்தார்.மேலும் இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் கண்டமனூர் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்த பிரேம் ஆனந்தன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து சார்பு ஆய்வாளர் பிரேமானந்த் மீது மூன்று பிரிவுகளில் கண்டமனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

      இந்த வழக்குபதிவு செய்யப்பட்டு 10 நாட்களுக்கும் மேல் ஆன நிலையில் இதுவரையில் இந்த வழக்கு குறித்து எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.இதனைதொடர்ந்து இந்த வழக்கின் மனுதாரான ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் கோவிந்தராஜன் ஆண்டிப்பட்டி துணை காவல்கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் வழக்கை முறையாக விசாரணை நடத்தாமல் போலியாக கையொப்பமிட்டு வழக்கை முடித்த சார்பு ஆய்வாளர்  பிரேமானந்த் மீது நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மூன்று பிரிவுகளில் வழக்குபதிவு செய்து பல நாட்களாகியும் 
அவரை கைது செய்யப்படவில்லையெனவும் ,அவரை உடனடியாக கைது செய்து வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.காவல்துறையில் ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் ஒருவர் பணியில் இருக்கும் சார்பு ஆய்வாளர் மீது புகார் அளித்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former inspector files a sensational complaint against the current inspector


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->