சென்னையில், முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர் காரை பறிமுதல் செய்த போலீசார்! விஷயம் அறிந்து வாயடைத்து போன போலீசார்!  - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் ஊரடங்கு விதியை மீறியதால், அவரது காரை சென்னை போலீஸார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த காரை ஓரங்கட்டி, அப்படியே விட்டு விட்டு சென்ற சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. 

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் களில் மிகச் சிலரே அனைவராலும் அறியப் பட்டவர்கள். அதில் ராபின் சிங் மிக முக்கியமான ஒருவர். அசார் ஜடேஜா, சச்சின் கங்குலி ட்ராவிட் யுவராஜ் போன்றோருடன் விளையாடியுள்ள ராபின் சிங், இந்திய அணிக்கு நீக்கி பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். 

சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் வசித்து வரும் ராபின் சிங், தற்போது கொரோனோ பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கை அடுத்து, அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக தனது காரை அவரே ஓட்டி கொண்டு கடைக்கு சென்றுள்ளார். ஆனால் தற்போது சென்னையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க வாகனங்களில் செல்லக்கூடாது நடந்து செல்ல வேண்டும் என போலீஸ் கமிஷனர் ஏ கே விஸ்வநாதன் அறிவித்திருந்தார். 

இதனையடுத்து விதிமுறை மீறிய ராபின் சிங்கை திருவான்மியூர் அருகே போலீசார் மடக்கி விசாரிக்க, போலீசார் தமிழில் விசாரிக்க, ராபின்சிங் ஆங்கிலத்தில் பதில் பேச சரியான புரிதல் இல்லாமல் போலீஸார் வழக்கமான விசாரணையில், இ பாஸ் இருக்கிறதா? லைசென்ஸ் இருக்கிறதா? வாகனத்திற்கான ஆவணங்கள் சரியாக இருக்கிறதா? என கேட்டு விதிமுறையை மீறியதாக வண்டியை ஓரங்கட்டுங்கள் எனக்கூறி பறிமுதல் செய்துள்ளனர். 

விதிமுறையை மீறிய ராபின் சிங் அவரிடம் எவ்வித வாக்குவாதம் செய்யாமல், உடனடியாக அவருக்கு தெரிந்த ஒருவருக்கு போன் செய்து வரவழைத்து அவருடைய வாகனத்தில் வீட்டுக்கு சென்று விட்டார்.  பறிமுதல் செய்த போலீசார் சாஸ்திரி நகர் போக்குவரத்து பிரிவு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதன் பின்னர் போலீசார் வழக்கமான பணிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். 

இந்த சம்பவம் கடந்த 20ம் தேதி நடைபெற்ற நிலையில், சாஸ்திரி நகர் போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் அழைத்து பேசியுள்ளார். அப்பொழுது கடந்த 20ம் தேதி உத்தண்டியில் ஏதேனும் முக்கிய பிரமுகர் வாகனத்தினை பறிமுதல் செய்தீர்களா என்று கேட்டதற்கு, பிரமுகர் காரா என விழித்துள்ளனர். அதன் பின்னர் போலீஸ் அதிகாரி வாகனத்தின் எண்ணை குறிப்பிட, பிறகு அந்த காரை பறிமுதல் செய்து இருந்தது தெரியவந்தது. பின்னர் தான் அவர் இந்தியன் கிரிக்கெட் வீரர் ராபின் சிங் என அந்த போலீசாருக்கு தெரியவந்தது. 

போலீசார் அவரை விசாரணை செய்தபோது, அவர் தன்னை கிரிக்கெட் வீரர் என அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை எனவும், அதே போல விசாரிக்கும்போது முழுமையான ஒத்துழைப்பு அளித்தார் எனவும், காரை ஒப்படைத்துவிட்டு அடுத்த சில நிமிடங்களில் சென்று விட்டதாகவும் அந்த போலீசார் தெரிவித்துள்ளார். 

தற்போது குடியிருக்கும் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக இருப்பதால் அவரே வாகனத்தை ஓட்டி வந்துள்ளது  தெரியவந்துள்ளது. முன்னனி கிரிக்கெட் வீரர் ஒருவர் சென்னையில் சென்றபோது அவருடைய கார் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கிழக்கு கடற்கரை சாலை போலீசாரிடையே பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

former Indian cricket player robin Singh car seized by Chennai police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->