விநாயகர் சதுர்த்தி எதிரொலி : பூக்கள் விலை அதிரடி உயர்வு.! - Seithipunal
Seithipunal


விநாயகர் சதுர்த்தி எதிரொலி : பூக்கள் விலை அதிரடி உயர்வு.!

தமிழகத்தில், விஷேச நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் போக்களின் விலை கடுமையாக உயர்ந்து விற்பனை செய்யப்படும். அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. 

அதாவது, கடந்த வாரம் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று ஒரு கிலோ மல்லிகைபூ ரூ.1,500 முதல் ரூ.1,800 வரை உயர்ந்துள்ளது. 

இதைத்தொடர்ந்து, 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ தற்போது 800 ரூபாய்க்கும், 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரளிப்பூ 200 ரூபாய்க்கும், 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட முல்லைப்பூ 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

இதேபோன்று, புதுக்கோட்டை, கடலூர், திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. பூக்கள் மட்டுமல்லாமல், காய்கறிகள் மற்றும் பழங்களின் விலையும் உயர்ந்துள்ளது. விலை அதிகமாக இருந்தாலும், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

flower rate increase in madurai mattuthavani flower market


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->