வால்பாறை நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் விடிய விடிய கன மழை பெய்து வருவதால் கருமலை, வெள்ளைமலை சுரங்க நீர்வீழ்ச்சி  போன்ற அனைத்து பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன்காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆற்றங்கரை ஓரம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

வால்பாறையில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான வெள்ளமலை சுரங்க நீர்வீழ்ச்சி, கருமலை போன்ற அனைத்து பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் கரையோர மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வெள்ளைமலை சுரங்க நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி செல்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flooding in the Valparai water fall Tourists are prohibited


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->