கள்ளக்காதலனுடன் உல்லாசம்..நேரில் பார்த்த கணவர்..கடைசியில் நடந்த அதிர்ச்சி!   - Seithipunal
Seithipunal


கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்ணை கணவர் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா மூக்கனஹள்ளியை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி கீதா. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த திலீப் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அப்போது சில சமயங்களில் கீதா, தனது கணவர் இல்லாத போது வீட்டுக்கே காதலனை வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்த கள்ளக்காதல் விவகாரம் விஜய்க்கு தெரியவர  அதிர்ச்சி அடைந்த அவர், மனைவி கீதாவை கண்டித்துள்ளார். இருப்பினும் கீதா கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி இரவு விஜய் வெளியே சென்ற நிலையில் காதலன் திலீப்பிடம் கீதாவின் வீட்டுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார். அந்த சமயத்தில் வெளியே சென்றிருந்த விஜய் திடீரென்று வீட்டுக்கு வந்து பார்த்தபோது காதலனுடன் கீதா உல்லாசமாக இருப்பதை பார்த்து அவர் ஆத்திரமடைந்தார். 

அப்போது கீதா சமையல் அறையில் இருந்து அரிவாளை எடுத்து வந்து விஜய்யை வெட்ட முயன்றபோது ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற விஜய், அரிவாளை பிடுங்கி கீதாவை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து துடிதுடித்து இறந்தார்.  காதலன் திலீப் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.  துரத்திச் சென்ற விஜய், மரத்தடியால் திலீப்பின் காலில் சரமாரியாக தாக்கினார். இதில் அவரது ஒரு கால் முறிந்தது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் விரைந்து சென்று விஜயை பிடித்து அப்புறப்படுத்தினர். இந்த கொலை சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் உன்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொலையான கீதாவின் உடலை மீட்டு உன்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

 இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் விஜயை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Flirting with a secret lover Husband caught in the act The shocking ending


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->