அதிகாலையில் சோகம் - திருக்கோவிலூர் அருகே கார் கவிழ்ந்து 5 பேர் பலி.!!
five peoples died for car accident in thirukovilur
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே காரின் டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரகண்டநல்லூர் அடுத்த தேவனூர் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மாதவன். ஆயுதப்படைக் காவலரான இவருடைய மனைவி மேனகா, அதே பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி, ராகவேந்திரன், சங்கீதா, ஒரு வயது குழந்தை கவுசிகா, சுபா, சாந்தி, பூமாரி கிராமத்தைச் சேர்ந்த சரிதா, அவரது சகோதரர் மோகன் உள்ளிட்டோர் நேற்று காரில் திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.

அதன் படி கார் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த அத்திப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக
உயிரிழந்தனர்.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து காவல்துறைக்கு அளித்த தகவலின் படி போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இந்த விபத்து குறித்து மணலூர்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
five peoples died for car accident in thirukovilur