மீன்பிடி தடைக்கால நிவாரணம்.. ரூ. 89.50 கோடி ஒதுக்கியது தமிழக அரசு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலகட்டத்தில் மீனவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு மீனவர் குடும்பத்திற்கும் தலா ரூ.5000 வீதம் தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகிறது. 

இந்த நிலையில் நடப்பாண்டிற்கான மீன்பிடித்தலை காலம் தொடங்கியுள்ள நிலையில் மீனவர்களுக்கான நிவாரணத் தொகைக்கான நிதியை தமிழக அரசு விடுவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் "கடல் மீன்வளத்தை பேணி காத்திட தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 ஆம் நாளன்று தொடங்கி ஜூன் 14ஆம் நாள் வரையிலும்.

மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1ம் நாள் அன்று தொடங்கி ஜூலை 31ம் நாள் வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மீன்பிடி தலைக்காலத்தின் போது மீன்பிடி விசைப்படகுகள், இழுவலைப்படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழு நேர மீன்பிடிப்பினை சார்ந்த மீனவ குடும்பங்கள் முற்றிலும் தொழிலின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மீனவர்கள் தங்களது குடும்பத்தினை சிரமம் இன்றி நடத்தி செல்ல குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.5000 வீதம் மீன்பிடி தடைக்கான நிவாரணம் வழங்கப்படுகிறது.

நடப்பண்டிற்கான மீன்பிடித்தடை காலத்தில் தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.79 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடித்தலைக்காள நிவாரணத் தொகை ரூ.5000 விதம் வழங்கிடும் பொருட்டு ரூ.89.50 கோடி அரசு நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணையிட்டுள்ளது. 

இத்திட்டத்தின் கீழ் 14 கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை இன்று முதல் பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைத்திடும் பணி துவங்கப்பட்டுள்ளன" என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fishing Prohibition Relief Rs89crore allocated by TNgovt


கருத்துக் கணிப்பு

பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ள இருப்பது



Advertisement

கருத்துக் கணிப்பு

பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ள இருப்பது




Seithipunal
--> -->