மீனவர்கள் கைது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய மந்திரிக்கு கடிதம்!
Fishermen Arrested Chief Minister M K Stalin s letter to the Union Minister
கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கைகளை எடுக்க மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சமீப காலமாக எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம், நாகப்பட்டினம் ,வேதாரண்யம், புதுக்கோட்டை போன்ற பகுதிகளை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும் அவர்களது படங்களை பறிமுதல் செய்வதும் என வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனை தடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு மீனவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர் ஆனாலும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.இந்தநிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவித்திட உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:இலங்கை கடற்படையினரால் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு இந்திய மீனவர்கள் மீன்பிடிப் படகுடன் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தை மத்திய வெளியுறவுத்துறை மந்திரியின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மீனவர்கள் கடலை நம்பியே உயிர்வாழ்ந்து வரும் நிலையில் தற்போது சிறை வாசத்தின் அச்சத்திலேயே வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மீனவர்கள் நீண்டகாலமாக சிறையில் வைக்கப்பபடுவதால் அவர்களின் குடும்பங்களுக்கு கடுமையான மன உளைச்சலையும் நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தை திறம்படக் கையாண்டு, கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கைகளை முன்னெடுக்க மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
English Summary
Fishermen Arrested Chief Minister M K Stalin s letter to the Union Minister