ஆன்லைன் மூலம் பணமோசடி: வாலிபருக்கு குண்டாஸ்!
Online money fraud Young man gets bombed
நெல்லையில் பொதுமக்களிடம் ஆன்லைன் மூலம் பணமோசடிசெய்த கேரள வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம், கிடங்காயத்தைச் சேர்ந்த ராசித் என்பவர் திருநெல்வேலி மாநகரில் ஆன்லைன் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என பொது மக்களை நம்பச் செய்து போலியான வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்த ஆசையைத் தூண்டியுள்ளார். மேலும் அவர் ஆன்லைன் மோசடி செய்து பொதுமக்களிடம் பணத்தை ஏமாற்றும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.
இந்தநிலையில் திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர்விஜயகுமார், போலீஸ் உதவி கமிஷனர் செந்தாமரைக்கண்ணன், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி நேற்று ராசித் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.
English Summary
Online money fraud Young man gets bombed