கொலை முயற்சி வழக்கு..3 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!  - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில்  கொலை, கொலை முயற்சி வழக்குளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் வெள்ளரிக்காயூரணி பகுதியைச் சேர்ந்த மூர்த்திராஜா  மற்றும் குலசேகரன்பட்டினம் காமராஜர் நகரைச் சேர்ந்த  முத்துச்செல்வன் ஆகிய 2 பேரும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில் கடந்த 6.10.2025 அன்று நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் ஆவர்.

அதேபோன்று திருச்செந்தூர் தலைவன்வடலி பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவர் ஆறுமுகநேரி காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஆவார்.இந்தநிலையில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ெதாடர்புடைய 3 பேரையும் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு கடந்த 10 மாதங்களில் மட்டும் 115 பேர் குன்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Attempted murder case Gangster Act invoked against 3 people


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->