பொங்கல் பரிசு தொகுப்பு.. தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! தமிழக அரசு அறிவிப்பு.!!
fingerprint not mandatory for pongal gift
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், வருகிற 2022 ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

21 பொருட்கள் அடங்கிய தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், கருப்பு மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2,15,48,060 குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

தமிழக அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பு ஜனவரி 3ம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு கைரேகை கட்டாயமில்லை, குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் ரேஷன் அட்டையை காண்பித்து பொங்கல் பரிசு பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
English Summary
fingerprint not mandatory for pongal gift