மகளுக்கு பாலியல் தொந்தரவு - தந்தைக்கு 5 ஆண்டுகள் சிறை - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் 14 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் 43 வயது கூலித்தொழிலாளி. இவர் 14 வயதுடைய தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து சிறுமி, தாயிடம் இது பற்றி கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், இது குறித்து கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கூலித்தொழிலாளியை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 75 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூபாய் 25 ஆயிரமும், அபராத தொகையை வழங்கவும் உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father jailed for 5 years for sexually harassing daughter in Pudukkottai


கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?
Seithipunal