கோப வெடிப்பு! கருப்பு கொடியில் கொதிக்கும் விவசாயிகள்...! மோடிக்கு கடும் எதிர்ப்பு...!
Farmers anger erupts Farmers boiling under black flag Strong opposition Modi
கோவை கொடிசியா அரங்கம் இன்று அரசியல் சூடுபிடிக்கும் மையமாக மாறியுள்ளது. தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார்.ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனிச்சிறப்பு விமானத்தில் கோவை விமான நிலையம் வரும் மோடியை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகள் வரவேற்கின்றனர்.

அங்கிருந்து கடும் பாதுகாப்பு வளையத்தில் மோடி, பிற்பகல் 1.30 மணிக்கு கொடிசியா வளாகம் நோக்கி புறப்படுகிறார்.மாநாட்டில் தென்னிந்திய இயற்கை விவசாயிகள் அவருக்கென சிறப்பான பாரம்பரிய வரவேற்பை அளிக்கின்றனர். பின்னர் பிரதமர் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, ‘பி.எம்.கிசான்’ திட்டத்தின் 21வது தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி நிதி உதவியை வழங்குகிறார். அதோடு, இயற்கை விவசாயத்தில் முன்னோடி சாதனை படைத்த விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
தொடர்ந்து அவர், இயற்கை விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் கருத்துப் பரிமாற்றமும் மேற்கொள்கிறார்.மோடி வருகையையொட்டி, கோவையில் 5 அடுக்குகள் கொண்ட திடப் பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.ஆனால், மாநாட்டிற்கு வெளியே சூழல் வேறுவிதமாக கெந்தளிக்கிறது.
மோடியின் பயணத்தை எதிர்த்து, பல்வேறு விவசாய சங்கங்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இயற்கை விவசாயத்திற்கு தேவையான மானியங்கள் வழங்கப்படவில்லை என்றும், அதற்கு முற்றிலும் முரணான மரபணு மாற்றப்பட்ட நெல் விதைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன என்றும் அவர்கள் கடும் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
மேலும், பிரதமரின் கோவை பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினரும் சாலையில் இறங்கி போராட்டம் செய்தனர். “கோவை மெட்ரோ திட்டத்தை நிராகரித்த மோடிக்கு கோவையில் என்ன வேலை?” என்ற முழக்கங்கள் அங்கே தொடர்ந்து முழங்கிக் கொண்டிருந்தன.
English Summary
Farmers anger erupts Farmers boiling under black flag Strong opposition Modi