பொங்கல் எதிரொலி - அரசு அலுவகங்களில் கூடுதல் டோக்கன் வழங்க உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தொடர் விடுமுறை காரணமாக இன்று முதல் வரும் 31ம் தேதி வரை சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், "பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மூன்று அல்லது நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், அரசு அலுவலகங்களில், இந்த விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வகையில் சில சிறப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். 

அந்த வகையில், அதிகளவு ஆவணங்கள் பதிவுக்கு வரும் என்பதால், ஜனவரி 17-ந் தேதி வரை பொங்கல் விடுமுறை என்பதால், இன்று முதல் வரை சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திர பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுவரைக்கும் 100 டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் இந்த டோக்கன்களின் எண்ணிக்கை 150-ஆக உயர்த்தி வழங்கப்படும். அதேபோல் 2 சார்ப்பதிவாளர்கள் பணியாற்றும் அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதேபோல், சார்பதிவாளர் அலுவலகங்களில் தற்போது வழங்கப்பட்டு வரும் 12 தட்கல் டோக்கன் முறை அடுத்த நாட்களில் 20-ஆக உயர்த்த வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

extra tokens provide in govt offices


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->