வாக்கு என்னும் பணி - தமிழகத்தில் கூடுதல் தேர்தல் அலுவலர்கள் நியமனம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில், மக்களவைக்கான தேர்தல் மற்றும் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மற்றும் ஒடிசா ஆகிய மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் என்று 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரைக்கும் 6 கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில் வருகிற 1-ந் தேதி இறுதியாக 7-ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை 4-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால், அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தற்போது தீவிரமாக செய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிக்குக் கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் அரசிதழ் வெளியிட்டுள்ளது. 

பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் 5 - 20 பேர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை நாளன்று தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உதவியாக இருந்து பணிகளை மேற்கொள்வது இவர்களின் முதன்மையான பணி" என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

extra election officers appointed for vote counting in tamilnadu


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->