இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டத்தில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - Seithipunal
Seithipunal


சென்னையில் பெண்களின் பாதுகாப்பை முன்னிறுத்தும் வகையில் தமிழக அரசு அறிமுகப்படுத்திய இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான கால அவகாசம் டிசம்பர் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல, இதற்கு முன் நிர்ணயிக்கப்பட்டிருந்த 10-ம் வகுப்பு தேர்ச்சி நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த திட்டத்தில் பயன்பெற பல பெண்களுக்கு வசதி கிடைத்துள்ளது.  

இந்த திட்டத்தின் கீழ், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க 250 ஆட்டோக்களை பெண் ஓட்டுநர்களின் மூலம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்டோக்களை வாங்குவதற்காக ஒவ்வொரு பெண் ஓட்டுநருக்கும் ₹1 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது. மீதித்தொகைக்கு வங்கிகள் மூலம் கடன் ஏற்பாடு செய்யப்படும்.  

இந்த திட்டத்தில், 25 முதல் 45 வயதிற்குள் உள்ள, ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) வைத்திருக்கும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். கைம்பெண்களுக்கு மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

முன்பு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி கட்டாயமாக இருந்தது. தற்போது அதையும் நீக்கி, கல்வி தகுதி இல்லாமல் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  

விண்ணப்பிக்கும் முறை: 
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (தெற்கு) அல்லது (வடக்கு), சிங்கார வேலர் மாளிகை, 8-வது தளம், சென்னை - 600001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

இந்த திட்டம் மூலம் பெண்களுக்கு பொருளாதார சுயமாக்மையும், தனி வாழ்வாதார வாய்ப்புகளும் கிடைக்கும். அதேசமயம், பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் இது சிறந்த முன்னெடுப்பாக அமைந்துள்ளது. 

தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என சமூக நலத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Extension of time to apply for Lilac Auto scheme


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->