அண்ணாமலை ஒரு அரசியல் வியாபாரி - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு.!
ex minister jayakumar press meet in chennai airport
அண்ணாமலையும், ஸ்டாலினும் கூட்டுச் சதி செய்கிறார்கள் என்று தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- “எங்களுடைய கட்சித் தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் ஏழை எளிய மக்களுக்காகவே வாழ்வை அர்ப்பணித்தவர்கள்.
ஜாதி, மத, இன, மொழி அனைத்தையும் தாண்டி பல திட்டங்களை தீட்டியவர்கள். அண்ணாமலையை பக்குவமில்லாத அரசியல் தலைவர் என்று கூட சொல்லமுடியாது. அவர் ஒரு அரசியல் வியாபாரி. இதோடு அவர் தன்னுடைய கருத்துகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரு சமூகநீதி காத்த வீராங்கனையை மதவெறி பிடித்தவர் போல சித்தரிக்க முயல்வது திமுக – பாஜகவின் கூட்டுச்சதி. சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஆகியவை குறித்து அவர் வாய் திறப்பதில்லை. ஆனால் அவருடைய ஒரே நோக்கம் ஜெயலலிதா குறித்து பேசுவதுதான்.
ஜெயலலிதாவை பொறுத்தவரை தெய்வபக்தி கொண்டவர்தான். ஆனால் மதவெறி பிடித்தவர் அல்ல. ஸ்டாலினும் அண்ணாமலையும் சேர்ந்து செய்கின்ற கூட்டுச்சதி என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ex minister jayakumar press meet in chennai airport