குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்.! சதிவலைகளை அறுத்தெறிவோம் - அம்மா நினைவுநாளில் அதிமுகவினர் உறுதிமொழி.! - Seithipunal
Seithipunal


இன்று தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாவது ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். 

ஏராளமான பொதுமக்களும் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், அ.தி.மு.க.வினர் நான்கு அணிகளாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள். 

இதில், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு வந்து ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். 

அதன் பின்னர், எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு செல்லும் நுழைவு வாயிலுக்கு அருகே உள்ள மேடையில் நின்று உறுதிமொழி ஏற்றனர். அந்த உறுதிமொழியை எடப்பாடி பழனிசாமி வாசிக்க தொண்டர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

அப்போது எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாவது, "குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, மக்கள் ஆட்சியை மலர செய்வோம். எதிரிகள் ஒருபக்கம் என்றால் துரோகிகள் மறுபக்கம், சதிவலைகளை முற்றிலும் அறுத்தெறிவோம்" என்று உறுதிமொழி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, கோகுல இந்திரா, நத்தம் விசுவநாதன், செங்கோட்டையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex cm jeyalalitha memorial day aiadmk parties pledge


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->