ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவில் 14 பிழைகள்: உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் சுட்டிக்காட்டு! - Seithipunal
Seithipunal


வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் நேற்று உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், சுப்ரியா சுலே, சஞ்சய் ரௌத், டி. ராஜா உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் மனுதாரர்களாகவும், இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையர்கள் எதிர்மனுதாரர்களாகவும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 14 பிழைகள் இருப்பதாகவும், ரூ. 220 கட்டணம் குறைவாகச் செலுத்தப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றப் பதிவாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞரின் கையொப்பம் இல்லாமை, போதிய ஆதார ஆவணங்கள் இன்மை, அரசியலமைப்பின் 32-வது பிரிவின் கீழ் தேர்தல் ஆணையர்களை தனிப்பட்ட முறையில் எதிர்த்தரப்பினராகச் சேர்த்ததற்கான காரணம் மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவின் தெளிவான அடையாள அட்டை ஆகியவை கோரப்பட்டுள்ளன.

இப்பிழைகள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்தால் மட்டுமே மனு மீது விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, செவ்வாய்க்கிழமை (அக். 13) உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இம் மனு, இன்றைய விசாரணைப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Errors Identified in INDIA Alliance Petition Submitted to Supreme Court


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->