ரூ.5 மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவதா...? தமிழக அரசின் மின்கொள்முதல் முடிவுக்கு டி.ஆர்.பி.ராஜா கடும் கண்டனம்...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தொடர்ந்து நிலவி வரும் மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 முதல் ரூ.37 வரை கொடுத்து வாங்குவது தேவையற்ற செலவுக்கு வழிவகுக்கும் என்று தி.மு.க. முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சினை தொடர்ந்து வருவதால், அதைச் சமாளிக்க தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 வரை கொடுத்து வாங்குவதற்குத் தமிழக அரசு அக்டோபர் 12-ஆம் தேதி அறிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள டி.ஆர்.பி.ராஜா, தனது சமூக வலைதளப் பதிவில் அரசின் மின்கொள்முதல் முடிவுகளைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,"ரூ.5-க்கு உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை ரூ.35 செலவழித்து வாங்கும் நிர்வாகமாகத் தமிழக வெற்றிக் கழக அரசின் செயல்பாடு உள்ளது.தேர்தலுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற தமிழக வெற்றிக் கழக அரசு, கடந்த மே 23-ஆம் தேதி முந்தைய தி.மு.க. ஆட்சியில் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டியது.

அதே அரசு, ஜூன் 25-ஆம் தேதி நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் குறைந்த விலையில் மின்சாரம் வாங்குவோம் என்று உறுதியளித்தது. ஆனால், அக்டோபர் 12-ஆம் தேதி ஒரு யூனிட்டுக்கு ரூ.37 வரை செலுத்தி அவசரமாக மின்சாரம் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ரூ.5.40 முதல் ரூ.9.50 வரை நிர்ணயிக்கப்பட்ட மின்கொள்முதல் கட்டணங்கள் என்னவாயின?

ஆந்திர அரசு, செப்டம்பர் 9-ஆம் தேதியே அக்டோபர் மாதத்துக்கான மின்தேவையைப் பூர்த்தி செய்ய ஒரு யூனிட்டுக்கு ரூ.16 முதல் ரூ.20 வரை செலுத்தி மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், தமிழக அரசு கடைசி நேரம் வரை காத்திருந்தது ஏன்? முன்கூட்டியே திட்டமிடத் தவறிவிட்டதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தி.மு.க. ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் வடசென்னை அனல்மின் நிலையங்கள் உரிய நேரத்தில் மின்உற்பத்திக்குத் தயாராக இருந்தபோதிலும், தற்போதைய அரசின் திட்டமிடல் குறைபாட்டால் நிலக்கரி இருப்பு குறைந்து, இரு நிலையங்களும் குறைந்த திறனில் இயங்குவதாக டி.ஆர்.பி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த மின்நிலையங்களில் ஒரு யூனிட் மின்சாரத்தைச் சுமார் ரூ.5 செலவில் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், அதைவிட ஏழு மடங்கு அதிக விலை கொடுத்து ரூ.35 முதல் ரூ.37 வரை செலுத்தி மின்சாரம் வாங்க வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மின்உற்பத்தி மற்றும் இறக்குமதி நிலக்கரி கொள்முதல் ஆகியவற்றில் அரசு முறையாகச் செயல்படத் தவறியதே தற்போதைய நெருக்கடிக்குக் காரணம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.தற்போதைய ஒப்பந்தத்தின் அடிப்படையில், 20 நாட்களுக்கு முழுமையான மின்தேவையையும் இந்த முறையில் பூர்த்தி செய்தால் ரூ.3,100 கோடிக்கும் அதிகமாகச் செலவாகும் என்று விவரம் அறிந்தவர்கள் தெரிவிப்பதாக டி.ஆர்.பி.ராஜா குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் வரிப்பணம் இவ்வளவு பெரிய அளவில் செலவிடப்பட வேண்டியதன் அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மின்கட்டணத்தை உயர்த்துவது மட்டுமின்றி, இத்தகைய முடிவுகளுக்கான முழுமையான செலவுக் கணக்கையும் தமிழக அரசு மக்களிடம் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மின்வெட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு உரிய திட்டமிடலுடன் செயல்பட வேண்டும் என்றும், அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதற்கான காரணங்களை விளக்க வேண்டும் என்றும் டி.ஆர்.பி.ராஜா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Buying 5 worth of electricity 35 TRP Raja strongly condemns Tamil Nadu government decision purchase electricity


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->