வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவது ஏன்? - முதலமைச்சருக்கு செந்தில் பாலாஜி கேள்வி!
Senthil Balaji Questions TVK Government Over High-Cost Power Purchases
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக அரசு அதிக விலைக்கு மின்சாரத்தைக் கொள்முதல் செய்வது குறித்துக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுக்குறித்த அவரின் பேட்டியில், தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் தலைமைச் செயலகத்தில்கூட மின்வெட்டு ஏற்படும் வகையில் மோசமான நிலை உள்ளது.
மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையாகப் பதிலளிப்பதில்லை.
தவெக அரசு தனது சொந்த மின் உற்பத்தியை 34 சதவீதமாகக் குறைத்துவிட்டு, முழுக்க முழுக்க வெளிச்சந்தையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்கிறது.
ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.20 முதல் ரூ.35 வரை கூடுதல் விலை கொடுத்து வாங்குவது மின்வாரியத்தின் நிதிநிலையைச் சீரழித்துத் தொழில் வளர்ச்சியைத் தடுக்கும்.
வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவதற்கான காரணத்தை முதலமைச்சர் விளக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Senthil Balaji Questions TVK Government Over High-Cost Power Purchases