ஈரோடு: நீதிபதி முன்னிலையில் காதலனை கரம்பிடித்த இளம்பெண்..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி வெங்கம்பூர் புதுப்பாளையத்தை சார்ந்தவர் துரைசாமி. இவரது மகன் நித்தியானந்தன் (வயது 24). இப்பகுதியை சார்ந்த சதீஷ் என்பவர் ஈரோடு குமலன்குட்டை பகுதியில் அலைபேசி கடையை நடத்தி வருகிறார். அக்கடையில் நித்தியானந்தன் பணியாற்றி வந்த நிலையில், அவருக்கும் சதீஷின் அக்கா மகள் காயத்ரி (வயது 20) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. 

இவர்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், காயத்ரியின் பெற்றோர்கள் இக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், காதல் ஜோடி இருவரும் கடந்த 2 ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியேறி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். பின்னர், கடந்த 3 ஆம் தேதி திண்டுக்கல் சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்துள்ளனர்.

இந்த சூழ்நிலைக்கு உள்ளாகவே கொடுமுடி காவல் நிலையத்தில் காயத்ரி கடத்தப்பட்டதாக புகார் அளிக்கவே, விசாரணை செய்த காவல் துறையினர் காதல் விவகாரம் என்பதால் காயத்ரியை கொடுமுடி காவல் நிலையத்திற்கு அழைத்துவர சொல்லியுள்ளனர். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் கணவருடன் வாழ விரும்புவதாக தெரிவித்த நிலையில், கணவருடன் காயத்ரியை அனுப்பி வைத்துள்ளனர். 

பின்னர் இருவரும் மதுரைக்கு சென்ற நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சதீஷ் நிதியானந்தத்திற்கு தொடர்பு கொண்டு, இரங்கம்பாளையம் பத்திர அலுவலகத்திற்கு இருவரும் வருமாறும், பத்திர அலுவலகத்தில் காயத்ரியின் பெற்றோரின் சொத்துக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எழுதி கொடுத்துவிட்டு செல்லுமாறு கூறியுள்ளார்.
 
இதனைக்கேட்ட நித்தியும் மனைவியுடன் கடந்த 17 ஆம் தேதி காரில் வரவே, முன்னதாகவே காத்திருந்த உறவினர்கள் காயத்ரியை காரில் அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து மனைவியை தனது மனைவியின் உறவினர்கள் கடத்தி சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து, காவல் துறையினர் இருதரப்பையும் காவல் நிலையத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பெற்றோர்களின் கண்ணீரால் அவர் பெற்றோருடன் செல்வதாக தெரிவித்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், விசாரணையின் போது நான் கணவருடன் தான் செல்வேன் என்று தெரிவித்தார். இதனால் நீதிமன்ற வளாகத்திலேயே பரபரப்பு ஏற்பட்ட நிலையில், காயத்ரியின் விருப்பப்படி அவரது கணவருடன் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Love Couple Marriage 24 November 2020


கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!
Seithipunal