ஈரோடு: காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி! இன்ப அதிர்ச்சி கொடுத்த இருவீட்டார்! - Seithipunal
Seithipunal


ஈரோடு: சென்னிமலை அருகே காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னிமலை அடுத்த முகாசிபிடாரியூர் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித், முப்பது வயது ஆகும் இவர், பெருந்துறை தனியார் பத்திர எழுத்தரிடம் உதவியாளராக பணியாற்றி வருகிறார். 

சென்னிமலை அடுத்துள்ள தகடூர் பகுதியைச் சேர்ந்த சுகன்யா என்ற 21 வயது பெண்ணும், ரஞ்சித்தும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். 

ஏற்கனவே இவர்களின் இரண்டு குடும்பங்களும் நெசவாளர் காலனி பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்த போது, இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. 

இருவரின் வீட்டாரும் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, சிவன்மலை விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். 

பின்னர் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு சென்னிமலை காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்துள்ளது.

இதனை அடுத்து போலீசார் காதல் ஜோடியின் பெற்றோரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து, அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

முடிவில் இரு வீட்டாரின் குடும்பத்தாரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்ததால், மணமக்களும், இரு விட்டாலும் மகிழ்ச்சியுடன் காவல் நிலையத்தில் இருந்து சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Chennimalai Lovers Marriage case


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->