#Breaking: மடமடவென களமிறங்கிய அதிகாரிகள்.. அதிரடியாக சீல் வைக்கப்பட்ட சட்டவிரோத சாய ஆலைகள்.! - Seithipunal
Seithipunal


சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 35 சாய ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய பாசனப்பகுதி காலிங்கராயன் பாசன பகுதி ஆகும். இந்த பாசனப்பகுதி பவானியில் இருந்து கொடுமுடி வரை சென்று சேர்வதால், இப்பகுதியில் உள்ள பல்வேறு விவசாய நிலங்கள் பலன் பெறுகிறது. 

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாய மற்றும் சாயக்கழிவு ஆலைகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்து வந்த நிலையில், இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை அங்குள்ள ஆறுகள் மற்றும் குளங்களில் கலக்கும் கொடூரமும் நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில், இன்று வருவாய் ஆட்சியர் கவிதா மற்றும் மொடக்குறிச்சி தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணியம் தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர். 

இதனையடுத்து சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 35 க்கும் மேற்பட்ட சாயக்கழிவு ஆலைகளுக்கு சீல் வைத்துள்ளனர். மேலும், இந்த சாயக்கழிவு ஆலைகளின் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Erode 35 Dye Industry Sealed by Officials today 7 Feb 2021


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->