தேர்தல் நேரத்தில் விபரீத முடிவு.. தமிழக அரசை எச்சரிக்கும் ஈபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் இன்று காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ள வருவாய்த்துறை அலுவலர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் வருவாய்த் துறையில் பணிப் பாதுகாப்பு, காலிப் பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 14000 ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இன்று முதல் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் பொது நிர்வாகத்தில், குறிப்பாக தேர்தல் சமயத்தில் வருவாய்த்துறையின் பணிகளின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளைப் போலன்றி, வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினரிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண முன்வருமாறு இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார். 

தமிழக முழுவதும் இன்று வருவாய்த்துறை அதிகாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் வருவாய்த்துறை முழுவதும் முடங்கம் அபாயம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS urges TNGovt must talking with revenue dept officials


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->