மின்கம்பத்தில் செடி, கொடிகள்...அலட்சியமாக செயல்படும் மின்துறை!
Electricity department functioning negligently with plants and shrubs on power poles
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் தினசரி பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்ற இடத்திலுள்ள மின் கம்பங்களை சூழ்ந்துள்ள செடி, கொடிகளை கண்டும் காணாத நிலையில் அலட்சியமாக இருப்பதின் மர்மம் என்ன.? என சமூக ஆர்வலராகிய ஈ.பி.அ.சரவணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மின் கம்பங்களில் செடி, கொடிகள் படர்ந்த வண்ணம் உள்ளன. இதனால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மேலும் மழைபெய்யும் போது இந்த மின்கம்பங்களின் அருகில் மின் கசிவுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால் உடனடியாக செடி, கொடிகளை அகற்ற சமூக ஆர்வலராகிய ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை.
புதருக்குள் மறைந்த மின் கம்பத்தை காண வில்லை.பேருந்து நிலையத்தில் மின் கம்பங்களில், செடி, கொடிகள் வளர்ந்து கிடப்பதால், மின் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உடனடியாக அகற்றனும்.
இது தொடர்பாக திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத்தலைவர் சமூக ஆர்வலராகிய ஈ.பி.அ.சரவணன் மின்வாரியத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட மத்திய பேருந்து நிலையம் ( பழைய பஸ் நிலையம் ) மேம்பாலம் அருகிலுள்ள மாநகராட்சி வணிக வளாகம் பகுதிகளிலுள்ள கம்பங்களின் வழியாக செல்லும் கம்பிகளில் செடி, கொடிகள் படர்ந்துள்ளன. அந்த வழியாக மின் கசிவு ஏற்பட்டு அசம்பாவித சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது. அந்த மின் கம்பிகளில் படர்ந்துள்ள செடி, கொடிகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
எளிதில் மின் கடத்தும் மரம், செடி, கொடிகள் உள்ளிட்டவை மின் கம்பி மற்றும் கம்பங்கள் மீது தொட்டு கொண்டு இருக்கும் போது, அவற்றை அகற்றாமல் அலட்சியாமாக இருப்பது போன்ற பல்வேறு பிரச்சினைகளை உடனே சரி செய்யாமல் மெத்தன போக்காக மின்சார வாரியம் இருப்பதினால் தான் மின் கசிவு, மின் தாக்குதல்கள் ஏற்பபட்டு பொதுமக்களுக்கும் உயிரிழப்பு ஏற்படும் ஆபத்துகளிலிருந்து அப்பாவி மக்களை காக்க போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வுகாண வேண்டுமென திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Electricity department functioning negligently with plants and shrubs on power poles