சென்னையில் சோகம்.. எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து விபத்து.! - Seithipunal
Seithipunal


சென்னை சோழிங்கநல்லூர் பரமேஸ்வரன் நகரில் வசித்து வருபவர் ஈஸ்வரன். இவர் சமையல் வேலை செய்து வருகிறார். சமீபத்தில் இவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டி ஒன்றை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்தநிலையில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அதன் பேட்டரிக்கு முதல் மாடியில் உள்ள வீட்டின் அறையில் வைத்து சார்ஜ் போட்டுள்ளார்.

இந்தநிலையில் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் பலத்த சத்தத்துடன் பேட்டரி வெடித்து தீப்பிடித்தது. இதனையடுத்து ஈஸ்வரன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வேகமாக வெளியேறினார்.

இதனிடையே வீட்டில் தீ பரவி எரிய தொடங்கியது. உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அங்கு தீயை அணைப்பதற்கு வீட்டிலிருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த செம்மஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Electric bike battery fire in cholinganallur


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->