கோடை விடுமுறையில் திடீர் மாற்றம் - மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பள்ளிக் கல்வித்துறை.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதனால் பள்ளிகள் அனைத்தும் தேர்தல் பணிக்கு ஏதுவாக ஏப்ரல் 13ஆம் தேதி முதல் தேர்தல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது. இதன் காரணமாக, ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் தேர்வுகள் நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், ஏப்ரல் 11ஆம் தேதி அன்று ரமலான் பண்டிகை வர உள்ளதால் ஏப்ரல் 10 மற்றும் 12ஆம் தேதி நடக்க இருந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் ஏப்ரல் 22 மற்றும் 23ஆம் தேதி நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பால், ஏப்ரல் 13ஆம் தேதி முதல் தொடங்கவிருந்த கோடை விடுமுறையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் ஏப்ரல் 22, 23ஆம் தேதி பள்ளிக்கு வரவேண்டிய சூழல் உள்ளதால், கோடை கால விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு இருந்த மக்கள், ஏப்ரல் 24ஆம் தேதிக்கு பிறகு தான் சுற்றுலா அல்லது சொந்த ஊர்களுக்கு செல்லும் திட்டங்களை திட்டமிட வேண்டியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

education department change summar holiday date in tamilnadu


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->