உப்பு சப்பில்லாத உரை... எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்! - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியிருப்பதாவது, 

எதிர் கட்சி துணை தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் அவை மரபை கடைபிடித்தார் என நம்புகிறேன். நடுநிலையாக சட்டசபை தலைவர் செயல்பட வேண்டும். ஆனால் அவரே ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டார். 

ஆளுநர் ஏற்கனவே தேசிய கீதம் இசைப்பது குறித்து சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். கோரிக்கை நிறைவேற்றப்படாததால் ஆளுநர் புறக்கணித்துள்ளார். இது ஆளுநருக்கு அரசுக்கும் இடையேயான பிரச்சனை. 

அ.தி.மு.க திட்டங்களை தங்கள் திட்டங்களாக தெரிவிக்கிறார்கள். அதை ஆளுநரும் பாராட்ட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். ஆளுநர் உரையில் எதிர்வரும் ஆண்டில் அரசு என்ன செய்யப் போகிறது என்பதை சுருக்கமாக சொன்னால் 'ஆளுநர் உரை உப்புச் இல்லாத உரை'. 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அழகாக வடிவமைத்த தி.மு.க அரசு அவசர அவசரமாக பேருந்து நிலையத்தை திறந்ததால் அடிப்படை வசதிகள் கூட இல்லை என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi Palaniswami speech


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->