கட்சியே தொடங்கவில்லை.. அறிவிப்புதானே வந்திருக்கு - முதல்வர் கறார்..! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவுள்ளதாக நேற்று தெரிவித்தார். மேலும், தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற நேரம் வந்துவிட்டது என்றும், தமிழக மக்களுக்காக என் உயிரை விடவும் தயாராக உள்ளேன் என்றும் பல விஷயங்களை பேசி கட்சியை ஜனவரி மாதம் துவங்குகிறேன் என்று தெரிவித்தார். 

இந்த விஷயம் தொடர்பாக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஒருபுறம் விமர்சனமும் மற்றொரு புறம் பாராட்டும் கிடைத்து வருகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்தார். 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " முதலில் நடிகர் ரஜினிகாந்த் கட்சியாக தனது அமைப்பை பதிவு செய்யட்டும்.. பின்னர் அது குறித்து கருத்து தெரிவிக்கலாம். ரஜினிகாந்த் கருத்து மட்டுமே சொல்லியுள்ளார். கட்சியாக பதிவு செய்ததும் கேள்வி கேளுங்கள், நான் பதில் சொல்கிறேன். அதிமுக தலைமையிலான ஆட்சி மீண்டும் கட்டாயம் அமையும் " என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi Palanisamy Statement about Rajinikanth Politics Announcement


கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!
Seithipunal