யார் இந்த திண்டுக்கல் ரத்தினம்? ED சோதனையில் சிக்கியது எப்படி? வெளியான பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் மணல் குவாரி அதிபர்களின் வீடு மற்றும் அவர்கள் தொடர்புடைய 75 இடங்களுக்கு மேல் அமலாக்கத்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன் என்பவர் வீடு மற்றும் அலுவலகங்களில் 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

அதே போன்று திண்டுக்கல்லில் மணல் குவாரி அதிபர் ரத்தினம் மற்றும் அவருடைய மைத்துனர் கோவிந்தன் ஆகியோர் வீடு மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இவர் மணல் குவாரி, பெட்ரோல் பங்க், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வரும் நிலையில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவிந்தனின் மருமகன்  வெங்கடேஷ் என்பவர் திண்டுக்கல் மாநகராட்சியின் திமுக கவுன்சிலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று கரூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக சுரங்க முறை கேட்டில் ஈடுபட்டு கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக வந்த தொடர் புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் 75க்கும் மேற்பட்ட கனிமவளத்துறை தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ED officials raid sand quarry owner Rathinam house


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->