ரத்தினம் வீட்டில் சிக்கிய தங்கத்தை அளக்க மதிப்பீட்டாளர் வருகை! பரபரக்கும் திண்டுக்கல் ரெய்டு! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் ஜி.என்.டி சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினம் மற்றும் அவருடைய மைத்துனர் கோவிந்தன் ஆகியோர் வீடுகளில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அனிப்பா நகரில் உள்ள கோவிந்தனுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்தில் மற்றும் சோதனை நிறைவு பெற்றது.

ஆனால் ரத்தினம் வீடு மற்றும் அலுவலகங்களில் இரவு முழுவதும் நீடித்த அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனையானது இரண்டாவது நாளை எட்டியுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வரும் நிலையில் தொழிலதிபர் ரத்தினம் தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியானது.

ஜிஎன்டி சாலையில் உள்ள அவரது வீட்டில் ரத்தினத்தின் மனைவி,  மூத்த மகன் துரைராஜ், இளைய மகன் வெங்கடேஷ் மற்றும் அவருடைய தாயார் மட்டுமே உள்ளதாக அமலாக்கத்துறை தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வரும் நிலையில் ரத்தினம் வீட்டிற்கு வங்கி அதிகாரி மற்றும் நகை மதிப்பீடியாளர் ஒருவர் 2 நகை எடை இயந்திரத்துடன் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ரத்தினம் வீட்டில் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் அதனை மதிப்பிடவே வங்கி அதிகாரியும், நகை மதிப்பீட்டாளரும் வரவழைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் ரத்தினம் வீட்டில் உள்ள பீரோ மற்றும் பாதுகாப்பு பெட்டகத்தின் சாவிகள் அவருடைய அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. ரத்தினம் வீட்டில் உள்ள பீரோக்கள் மற்றும் லாக்கர்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ED called Jewel appraisers to Dindigul Rathnam house


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->