தமிழகத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


வேலூரில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

ந‌மது பூமியின் மேற்பரப்பு ஆடாமல் அசையாமல் உறுதியாக இருப்ப‍தாகக் கருதுகிறோம். வானைத் தொடும் அளவுக்கு உயர்ந்த பல மாடிக்கட்டிடங்கள் பெரிய நகரங்களில் கட்ட‍ப்பட்டுள்ள‍ன. பூமியின் மேற்பரப்பு உறுதியாகவும், அசையாமலும் இருப்ப‍தால் தானே இக்கட்டிடங்கள் விழுந்து விடாமல் நிலைத்து நிற்கின்றன. ஆனால் அதேவேளையில் உலகின் பல்வேறு பகுதிகளில் அவ்வ‍ப்போது நிலநடுக்கம் எனப்படும் பூகம்பம் ஏற்பட்டு பெருத்த‍ளவில் சேதங்கள் உண்டாகின்றன.

நிலநடுக்கம் அல்லது பூகம்பம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி, அதனால் சக்தி வெளியேற்றப்படும்போது, தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இதனை டெக்டானிக் தட்டுகள் என்று கூறலாம். இந்த அதிர்வுகள் ரிக்டர் அளவு நிலநடுக்கமானியினால் அளக்கப்படுகிறது. 

இந்நிலையில், வேலூரில் அதிகாலை 4.17 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தமிழக பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூரில் இருந்து மேற்கு தென்மேற்கு திசையில் 59 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

earthquake in vellore


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->