மதுபோதையில் மோதல்...கொலையில் முடிந்த தகராறு...! பீர்பாட்டிலால் தாக்கப்பட்ட ரவுடி பலி...! - காவலர்கள் அதிரடி விசாரணை
drunken brawl dispute that ended murder rowdy killed after being attacked beer bottle Police conduct investigation
விருதுநகர் மாவட்டம் ரோசல்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்புராஜ் (32) மீது திருட்டு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவர் ரவுடி பட்டியலில் இடம்பெற்றவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சம்பவ நாளன்று, விருதுநகர் கே.கே.எஸ்.என். நகரில் உள்ள டாஸ்மாக் பாருக்கு மது அருந்தச் சென்ற சுப்புராஜ், அங்கு இருந்த அல்லம்பட்டியைச் சேர்ந்த அருண்குமார் (31) மற்றும் சின்ன பேராலியைச் சேர்ந்த விஜயபிரபு (44) ஆகியோரிடம் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தகாத சொற்கள் பயன்படுத்தி திட்டியதோடு, பாட்டிலால் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த அருண்குமார் மற்றும் விஜயபிரபு இருவரும், பாரில் இருந்து வெளியே வந்த சுப்புராஜை பீர் பாட்டிலால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் கடுமையாக காயமடைந்த சுப்புராஜ், முதலில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் ஊரக காவலர்கள் கொலை வழக்காக பதிவு செய்து, அருண்குமார் மற்றும் விஜயபிரபு ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
drunken brawl dispute that ended murder rowdy killed after being attacked beer bottle Police conduct investigation