புதுக்கோட்டையில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.9 கோடி பெறுமதியான 4.82 லட்​சம் போதை மாத்திரைகள் பறிமுதல்; நான்கு பேர் கைது..! - Seithipunal
Seithipunal


புதுக்​கோட்டையில் இருந்து 4.82 லட்​சம் போதை மாத்திரைகளை கடத்த இருந்த நன்கு பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்​கோட்டை நகர டிஎஸ்பி இரா.பிருந்தா தலை​மையி​லான போலீ​ஸார், டிவிஎஸ் கார்​னர் பகு​தி​யில் ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்​டிருந்​த​னர். அப்போது சந்​தேகத்​துக்கு இடமான வகை​யில் 04 பேர் அட்​டைப் பெட்​டிகளு​டன் சாலை​யோரத்​தில் நின்​றிருந்​துள்ளனர்.

அவர்​களிடம் ரோந்து பணியில் இருந்த போலீசார் விசாரணை நடத்​தியபோது, அவர்​கள் போதை மாத்​திரைகளை இலங்​கைக்கு கடத்த இருந்​ததும், வாக​னம் ஒன்​றுக்​காக காத்​திருந்​ததும் தெரிய ​வந்​துள்ளது.

சுமார் 4.82 லட்​சம் போதை மாத்திரைகளை கடத்தி செல்ல இருந்த ராம​நாத​புரம் மாவட்​டம் பாம்​பன் பகு​தி​யைச் சேர்ந்த ஆம்​ஸ்ட்​ராங் ​(33), அமல்​ராஜ் (37), பிர​தாப்​ (35), சந்​தி​யா (36) ஆகியோரைப் போலீ​ஸார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 07 பெட்டிகளில் இருந்து, ரூ.9 கோடி மதிப்​பிலான 4.82 லட்​சம் போதை மாத்​திரைகள் பறி​முதல் செய்​யப்​பட்டுள்ளன.

ஆனால், இந்த மாத்​திரைகளில் உற்​பத்தி செய்​யப்​பட்ட இடம் குறித்த விவரங்​கள் எதுவும் இல்லை என்றும், இது தொடர்பாக அவர்களிடம் வி​சா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Drug pills worth Rs 9 crores which were about to be smuggled from Pudukkottai to Sri Lanka were seized and four people were arrested


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->