புணேவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1,470 போதை மாத்திரைகள் பறிமுதல்: கோவையில் 2 பேர் கைது!
Drug pills smuggled Pune kovai
மகாராஷ்டிர மாநிலம் புணேவில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகள் கோவையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், மெத்தப்பேட்டை என்ற உயர்ரக போதைப்பொருள் கடத்திய மற்றொரு நபரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
1,470 போதை மாத்திரைகள் பறிமுதல்
சம்பவம்: கோவை உக்கடம் சுங்கம் புறவழிச் சாலையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கு இடமாக வந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தனர்.
கைது: அவர் கோவை புதூரைச் சேர்ந்த முகமது தாரிக் என்பதும், புணேவில் உள்ள மருந்துக் கடைகளில் குறைந்த விலைக்குப் போதை மாத்திரைகளை வாங்கி வந்து கோவையில் அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
பறிமுதல்: உடனடியாக முகமது தாரிக்கைக் கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து 1,470 போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர். இவர் மீது ஏற்கெனவே 4 கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மெத்தப்பேட்டை கடத்தியவர் கைது
இதேபோல, இருந்து கோவை கவுண்டம்பாளையத்தில் நடந்த சோதனையில், கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் பெங்களூருவில் இருந்து மெத்தப்பேட்டையைக் கடத்தி வந்து கோவையில் உள்ள இளைஞர்கள் மற்றும் ஐ.டி. ஊழியர்களுக்கு ஒரு கிராம் ரூ. 3,500-க்கு விற்று வந்தது தெரியவந்தது.
பறிமுதல்: அவரிடம் இருந்து 80 கிராம் மெத்தப்பேட்டை மற்றும் 2 விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
English Summary
Drug pills smuggled Pune kovai