போதைப் பொருட்கள் விழிப்புணர்வு போட்டி.. வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு!
Drug awareness competition Prizes for the winning students
"ஆற்காடுடில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ் பி மற்றும் எம் எல் ஏ பங்கேற்று சிறப்பித்தனர்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (11.08.2025) காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றபோதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு பிரச்சார பெருந்திரல் உறுதிமொழியேற்கும் நிகழ்வினில் ஆற்காடு Sss கலை மற்றும் அறிவியல்
மேலாண்மைக் கல்லூரியில் நடந்தது.
மாவட்ட காவல் காண்காணிப்பாளர் அய்மன்ஜமால் இ.கா.ப. அவர்கள் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு குறித்தவிழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கும், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கலைஞர்களுக்கும் நினைவுப்பரிசுகளை வழங்கினார்.

உடன் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் . மாவட்ட வருவாய் அலுவலர் செ.தனலிங்கம். நகரமன்றதுணைத் தலைவர் பவளக்கொடி சரவணன், உதவி ஆணையர் கலால் ராஜ்குமார். வருவாய் கோட்டாட்சியர் இராஜராஜன்,கல்லூரி தாளாளர்சங்கர், வட்டாட்சியர்கள் கவிபித்தன், செல்வி.மகாலட்சுமி, கல்லூரி முதல்வர் இராஜலட்சுமி மற்றும் பலர் உள்ளனர்.
English Summary
Drug awareness competition Prizes for the winning students