டிரைவிங் லைசென்ஸ் RTO ஆபிஸ் செல்ல வேண்டாம்.. டிரைவிங் லைசென்ஸ் வாங்க இதை மட்டும் செய்தால் போதும்! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிகள், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் அறிவிப்பின் கீழ், ஓட்டுநர்களுக்கான செயல்முறையை மிகவும் எளிதாக்கியுள்ளன. 

இந்த மாற்றங்களின் அடிப்படையில், நீங்கள் இனி RTO சோதனை ஒன்றையும் சந்திக்காமல் ஓட்டுநர் உரிமம் பெறலாம். இதற்கான முக்கியம், அரசு அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பயிற்சியை முடித்தால் போதும். பயிற்சி முடிவில், பள்ளியின் மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றால், அந்த சான்றிதழின் அடிப்படையில் நேரடியாக RTO சோதனை இல்லாமல் ஓட்டுநர் உரிமம் கிடைக்கும். 

ஆனால், இந்த பயிற்சிப்பள்ளிகளுக்கு சில கண்டிப்பான வழிகாட்டுதல்கள் உள்ளது. ஒவ்வொரு வகையான வாகனங்களுக்கும் குறிப்பிட்ட நில அளவுகள் அவசியம்:  இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான பள்ளிக்கு ஒரு ஏக்கர் நிலம் தேவை. நடுத்தர மற்றும் கனரக வாகனங்களுக்கான மையங்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் அவசியம்.

பயிற்சியாளர்கள் குறைந்தபட்சம் 12-ஆம் வகுப்பு கல்வி மற்றும் 5 ஆண்டுகள் ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பயிற்சியில் சேர்க்கப்படும் 29 மணிநேரம் நேர்த்தியான பயிற்சி:  21 மணிநேரம் நகர்ப்புற, கிராமப்புற மற்றும் நெடுஞ்சாலையில் ஓட்டுநர் திறன்களை முழுமையாக பயிற்சி பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

8 மணிநேரம் சாலை பாதுகாப்பு, விபத்து தடுப்பு, போக்குவரத்து விழிப்புணர்வு, முதலுதவி மற்றும் எரிபொருள் சேமிப்பு பற்றிய பகுதிகளைக் கற்பிக்கிறது.

இந்த புதிய விதிகள் மூலம் இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் பெறுவது மிகுந்த வசதியாக மாறியுள்ளது, இதன் மூலம் வாகன ஓட்டுநர்களின் திறமை மற்றும் பாதுகாப்பு மேலோங்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Driving license Don go to RTO office Just do this to buy driving license


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->