சம்பா சாகுபடிக்கு காவிரியில் கூடுதலாக இரு வாரங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் - டாக்டர் இராமதாஸ் வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


சம்பா சாகுபடிக்காக காவிரியில் கூடுதலாக இரு வாரங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டிருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களின் பல பகுதிகளில் சம்பா நெற்பயிர்கள் கதிர் முற்றியிருக்கும் நிலையில் திடீரென நீர்திறப்பு நிறுத்தப்பட்டிருப்பது காவிரி படுகை உழவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது!

மேட்டூர் அணை வழக்கத்தை விட நடப்பாண்டில் முன்கூட்டியே திறக்கப்பட்டதும், வழக்கத்தை விட கூடுதலாக 19 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதும் உண்மை தான். ஆனால், காவிரி படுகையின் பல பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் இன்னும் அறுவடைக்கு தயாராகவில்லை.

குறுவைக்கு பிறகு தாளடி சாகுபடி தாமதமாகவே தொடங்கியது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சம்பா மறு சாகுபடி செய்யப்பட்டது. அதனால், காவிரி பாசன மாவட்டங்களில் 20% பரப்பளவிலான பயிர்களுக்கு இன்னும் அதிக நாட்கள் தண்ணீர் தேவைப்படுகிறது.

தண்ணீர் இல்லாவிட்டால் 2 லட்சம் ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்படும். மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி 103.60 அடி தண்ணீர் உள்ள நிலையில், பிப்ரவரி 15-ஆம் தேதி வரை காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About Mettur dam opes issue 2023


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->