டாக்டர் ராமதாஸ்க்கு லண்டனிலிருந்து வந்த நன்றி!  - Seithipunal
Seithipunal


வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக டாக்டர் ராமதாஸ் க்கு பல தரப்பில் இருந்து நன்றியை தெரிவித்து வருகின்ற்றனர். அதில் லண்டனில் இருந்து ஒருவர் தெரிவித்ததை குறிப்பிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

அந்த பதிவானது, "1984-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் குத்தாலம் தொகுதியிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவரும்,  பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவராக பணியாற்றியவருமான பாப்பா சுப்பிரமணியத்தின் புதல்வர் பாப்பா வெற்றி லண்டனில் இருந்து இன்று காலை என்னிடம் தொலைபேசியில் பேசினார்.

வன்னியர்களுக்கு 10.50% இடப்பங்கீடு வென்றெடுத்துக் கொடுத்ததற்காக  வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார். ‘‘ அய்யா... இந்த இடப்பங்கீடு வன்னியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு பெரிதும் உதவும்’’ என்று கூறிய பாப்பா வெற்றி,  எனது பொதுக்கூட்ட உரைகளை சிறுவயதில் கேட்டதையும் நினைவு கூர்ந்தார்.

‘‘ அய்யா... இப்போது எனக்கு 30 வயது.  20 ஆண்டுகளுக்கு முன் எனக்கு 10 வயதாக இருந்த போது எனது தந்தையின் பின்னால் மறைந்து நின்று கொண்டு அய்யாவின் பொதுக்கூட்ட பேச்சுகளைக் கேட்டிருக்கிறேன்” என்று பாப்பா வெற்றி கூறினார்" என தெரிவிக்கப்பட்டுளள்து.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dr Ramadoss got call from London


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->