பெரியார் சிலை மீது மாட்டு சாணம்! கடுமையான நடவடிக்கை கோரும் டாக்டர் இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


கோவை : பெரியார் சமத்துவபுரத்தில் பெரியார் சிலை மீது மாட்டு சாணம் கரைத்து ஊற்றிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அடுத்த வடசித்தூர் பெரியார் சமத்துவபுரத்தில் பெரியாரின் மார்பளவு சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இந்த சிலை மீது சிலர் மாட்டுச் சாணத்தைப் பூசி அவமதிப்பு செய்துள்ளனர். 

இதுகுறித்து தகவலிறந்த பெரியார் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, மக்களுக்கு சுயமரியாதை உணர்வை ஏற்படுத்த போராடிய பெரியாரின் சிலையை அவமதிருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "பொது அமைதியையும்,  சட்டம் - ஒழுங்கையும் சீர்குலைக்கும் நோக்கத்துடன் இது செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும்.  

இதற்கு காரணமானவர்களையும், அவர்களின் பின்னணியில் இருப்பவர்களையும்  கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Condemn to Kovai Periyar Statue issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->