செஞ்சி மாணவி தற்கொலை முயற்சி விவகாரம்.. உச்சகட்ட சோகத்தில் அன்புமணி..! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியை சார்ந்த மாணவி ரம்யா, மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்துள்ளார். நேற்று முன்தினம் நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அவர் குறைவான மதிப்பெண் பெற்றதால் தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் இருக்கிறார். 

இந்த விஷயம் தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள மருத்துவர் அன்புமணி இராமதாஸ், மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்ய வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் வருத்தத்தையும், ஆலோசனையையும் பதிவு செய்துள்ளார்.

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதை தாங்கிக் கொள்ள முடியாமல் செஞ்சி மாணவி ரம்யா தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.  நீட் என்ற சமூக அநீதிக்கு எதிராக போராடி வெற்றி பெறுவதே தீர்வு. தற்கொலை தீர்வு அல்ல.

நீட் தேர்வால் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இன்னும் எத்தனை பேரின் உயிரை நீட் காவு வாங்கப் போகிறதோ? நீட் தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் எவரும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Feeling sad about Gingee NEET Student suicide


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal