App இல் முதலீடு செய்து ஏமாறவேண்டாம்..இணைய வழி காவல்துறை எச்சரிக்கை!  
                                    
                                    
                                   Dont be deceived by investing in the app Online police alert
 
                                 
                               
                                
                                      
                                            இணையவழி மூலமாக அல்லது whatsapp, Facebook, Telegram, Instagram மூலமாக அதிக லாபத்தை கொடுக்கிறோம் என்று பொதுமக்களை ஏமாற்றும் சம்பவம் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது.  
அதே போல் புதுச்சேரியைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட நபர்கள் இணைய வழியில் வந்த பல்வேறு Links மூலமாக SHOPIFY,E2,G2, NEWYARK,GD7,GD6,NYE20,PO1 1GIFT,C23 இதுபோன்று பல்வேறு Appகலை இணைய வழி மோசடிக்காரர்கள் உருவாக்கி பொதுமக்களுக்கு அனுப்பி 3500 ரூபாய் கட்டணம் செலுத்தினால் 30 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு 112 ரூபாய் தருகிறோம் என்றும், 23 ஆயிரம் ரூபாய் பணத்தை App மூலம் செலுத்தினால் 805 ரூபாய் நாள் ஒன்றுக்கு 60 நாளைக்கு கொடுக்கிறோம் என்றும், 28 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தினால் 30-வது நாளில்  தங்கமாக வாங்கிக் கொள்ளலாம் அல்லது ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் இது போன்று பல்வேறு ஆசை வார்த்தைகளை அந்த ஆப்பிள் தெரிவித்து முதலாவது பணம் செலுத்திய ஒரு சில நபர்களுக்கு மட்டும் 60 நாட்களும் அவர்கள் சொன்னபடி பணத்தை கொடுத்து அவர்கள் முதலீடு செய்த பணத்தையும் 60வது நாள் திருப்பி கொடுத்து குறிப்பிட்ட சில நபர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி அவர்களுக்கு வந்த லாபத்தை மற்றவர்களுக்கு சொல்லி வங்கிகளில் அவர்களுக்கு தினமும் பணம் வந்ததை காட்டி அவர்கள் மூலமாகவே பல ஆயிரக்கணக்கானோர் மேற்சொன்ன ஆப்களில் முதலீடு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.  
இது சம்பந்தமாக இன்று 20க்கும் மேற்பட்டோர் இணைய வழி காவல் நிலையத்தில் வந்து தாங்கள் மேலே சொன்ன பல்வேறு App இல் சேர்ந்து பணத்தை செலுத்தியுள்ளனர் மேலும் பணம் செலுத்தியவர்களுக்கு தினமும் அவர்கள் சொன்ன பணமும் வரவில்லை 30 நாட்களில் மேற் சொன்ன App அவர்களுடைய மொபைல் ஃபோனிலிருந்து தொடர்பு கொள்ள முடியாதது போல் ஆகி விட்டதால் அது சம்மந்தமாக இருபதுக்கு மேற்பட்டோர் இன்று இணைய வழி காவல் நிலையம் வந்து புகார் கொடுத்துள்ளனர். அவர்களிடம் விசாரிக்கும் பொழுது ஆயிரக்கணக்கான புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிக பணம் கிடைக்கிறது என்று ஆசைப்பட்டு மேலும் ஒரு சில நபர்களுக்கு அந்த பணம் வந்ததை நம்பிக்கொண்டு முதலீடு செய்தது தெரியவந்துள்ளது. 
இது சம்பந்தமாக புதுச்சேரி இணைய வழி காவல்துறை புதுச்சேரி மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் இணைய வழி மூலமாக வருகின்ற லிங்க் அல்லது App இல் முதலீடு செய்து அதிக ஆசை காட்டி நிறைய பணம் தருகிறோம் நிறைய வட்டி தருகிறோம் தங்கம் தருகிறோம் என்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஏமாந்துள்ளனர். ஆகவே இது போன்ற ஆப்களில் பணத்தை செலுத்தி தங்கள் பணத்தை இழக்க வேண்டாம் என புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தின் சார்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம். இது சம்பந்தமாக எந்தெந்த  App என்பது சம்பந்தமாகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       Dont be deceived by investing in the app Online police alert