பி.பி.இ உடையை அலட்சியமாக பறக்கவிட்ட பணியாளர்.. கவ்வி சென்ற நாய்.. கோவையில் பகீர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்து வருகிறது. மருத்துவ பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பி.பி.இ எனப்படும் உடற்பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படுகிறது. இதனை அணிந்து அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,26,581 ஆக உயர்ந்துள்ளது.  பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 78,161 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 1,765 ஆக உயர்ந்துள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்த வரையில் 1,026 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தற்போதுவரை 320 பேர் பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். 702 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள கொடிசியா கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்படும் பி.பி.இ உடல் பாதுகாப்பு ஆடைகளை நாயொன்று தூக்கி செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கொரோனா பரவும் அபாயத்தில், பி.பி.இ ஆடைகளை பாதுகாப்பற்ற முறையில் வீசிவிட்டு செல்வது எப்படிப்பட்டது? என்ற குரலும் எழுந்து வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dog pick PPE dress in Coimbatore Codissia


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->