பிரசவத்திற்கு வந்த பெண்ணின் வயதை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்.! குழப்பத்தில் போலீசார்!! - Seithipunal
Seithipunalசென்னையில் 16வயது சிறுமி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது சிறுமியின் வயதை கேட்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அந்த சிறுமியை கவனித்துக்கொள்ள பெரியவர்கள் யாரும் உடன் வரவில்லை. ஒரே ஒரு வாலிபர் மட்டும் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்து கவனித்து வந்துள்ளார். இதனால் மருத்துவர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது.

இதனையடுத்து பிரசவத்திற்கு வந்த பெண் சிறுமி என்பதால் காவல்துறைக்கு மருத்துவமனை ஊழியர்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். 

போலீசார் நடத்திய விசாரணையில், அந்த சிறுமிக்கு பெற்றோர்கள் இல்லை என்பது தெரியவந்தது. சிறுமி போலீசாரிடம் கூறுகையில், எனக்கு பெற்றோர்கள் இல்லாததால் தனிமையில் கஷ்டப்பட்டு வந்தேன். அதனால் தான் எனக்கு ஆதரவு கொடுக்கும் எண்ணத்தில் இந்த வாலிபர் என்னை திருமணம் செய்துகொண்டார் எனவும், மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்தே இரவு, பகலாக அவர் தான் என் பக்கத்தில் இருந்து கவனித்து வருகிறார் எனவும் கூறியுள்ளார்.

சிறுமி கூறுவதை கேட்ட போலீசார் செய்வதறியாது திகைத்தனர். மேலும், போக்ஸோ சட்டத்தின் கீழ் வாலிபரை கைது செய்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிறுமிக்கு ஆதரவாக யாரும் இல்லை என்ற  சூழ்நிலையில் அந்த வாலிபர் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது என உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து வருகின்றனர்.

English Summary

doctors shocked for pregnant women age


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal