தமிழக அரசியலில் ‘திமுக vs தவெக’? செங்கோட்டையன் மூலம் ஓபிஎஸ், டிடிவியுடன் கூட்டு! கொங்கு+டெல்டா ஓட்டுக்களை வளைப்பாரா விஜய்! - Seithipunal
Seithipunal


2026 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கக்கூடிய சூழல் உருவாகி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக அதிமுகவுக்கு முதன்மை ஆதாரமாக இருந்த கவுண்டர் மற்றும் முக்குலத்தோர் சமூக வாக்குகள், தற்போதைய அமைப்பில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பக்கம் திரும்பக்கூடும் என்ற அரசியல் கணிப்புகள் வலுப்பெறுகின்றன. இதன் மூலம் மேற்கு மாவட்டங்கள், டெல்டா, தென் மாவட்டங்களில் திமுகக்கு மிகப்பெரிய சவாலை உருவாக்க தவெக தயாராகிக் கொண்டிருக்கிறது.

விஜய் ஆரம்பித்த காலம் முதலே “2026 தேர்தல் திமுக vs தவெக” என வலியுறுத்தி வந்தார். கரூர் சம்பவத்திற்குப் பிறகு இந்தக் கோஷம் இன்னும் பலமாக மாறியுள்ளது. அதிமுக–வை விமர்சிக்காமல் வந்த விஜய் நிலையிலும், அதிமுக கரூர் விபத்தில் விஜய்க்கு ஆதரவாக நின்றது குறிப்பிடத்தக்கது. இந்த நல்லுறவு காரணமாக அதிமுக போர்வையில் இருந்த செங்கோட்டையன் நேரடியாக தவெகவுக்கு வந்திருப்பது, தவெக வலிமையை அரசியல் ரீதியாக பலமடங்கு உயர்த்தியுள்ளது.

50 ஆண்டுகளுக்கு மேல் அதிமுக அரசியலில் அனுபவம் கொண்ட செங்கோட்டையன், தற்போது மேற்கு மண்டலத்தின் 4 மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.கொங்கு வேளாள கவுண்டர் வாக்குகள் அதிகம் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி போன்ற பகுதிகளில், தவெகவுக்கு தேர்தல் வேர்களை அமைத்துக்கொள்ள இது மிகப்பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

மேலும், செங்கோட்டையன் மீது கொங்கு மாவட்டத்தில் அதே சமூகத்தைச் சேர்ந்த பல நிர்வாகிகள் நம்பிக்கை வைத்திருப்பதால், அதிமுக சீட் வழங்காத அதிருப்தி கொண்ட குழுக்களையும் தவெக பக்கம் தள்ளக்கூடிய திறன் அவருக்கு உள்ளது.

ஒரே தொகுதியில் 8 முறை வென்று சாதனை படைத்த செங்கோட்டையன், தனிப்பட்ட செல்வாக்குடன் கொங்கு முழுவதும் செயல்படக் கூடியவர். தற்போது தவெக வலிமை குறைவான இந்த பகுதிகளில் வேட்பாளர்கள் அமைத்தல் முதல் வாக்குப் பரவல் வரை பல முக்கிய வேலைகளிலும் அவர் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருபுறம், டிடிவி தினகரன், ஓ.பி.எஸ் ஆகியோர் தனித்தனி நகர்வுகளில் இருந்தபோதும், இருவரும் தவெக கூட்டணியில் சேரும் வாய்ப்பு அதிகம் என செய்திகள் தெரிவிக்கின்றன.சசிகலாவும் இந்த அணிக்கு பக்கபலமாக வருமானால், முக்குலத்தோர் — கள்ளர், மறவர், அகமுடையார் — சமூக வாக்குகள் நேரடியாக விஜய் பக்கம் நகரும்.

முக்குலத்தோர் வாக்குகள் அதிகமாக உள்ள தஞ்சாவூர், திருவாரூர், தேனி, மதுரை, நெல்லை, விருதுநகர் பகுதிகளில், தற்போதைய அதிமுக பலவீனம் காரணமாக திமுக ஒரே போட்டியாளராக இருந்தது.ஆனால் தவெக இந்த சமூக வாக்குகளை பெற்றால், திமுகக்கு நேரடி போட்டி உருவாகும்.

ஓ.பி.எஸ், தினகரன், சசிகலா ஆகியோர் வெளியேற்றம்,வன்னியர் இடஒதுக்கீடு பிரச்சனை,அதிமுக உள்ளக மோதல்கள்,கொங்கு & முக்குலத்தோர் சமூகங்களில் அதிருப்தி. இந்த பின்னணியில், செங்கோட்டையன் போன்ற உயர்நிலைத் தலைவர் தவெகவில் இணைந்திருப்பது, விஜய் சொன்ன திமுக vs தவெக என்ற சூழலை நிஜமாக்கும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.

தற்போதைய அரசியல் சமிக்ஞைகள் தெளிவாக ஒன்றையே காட்டுகின்றன:20 ஆண்டுகளாக அதிமுகவுக்கு ஆதரவாக இருந்த கவுண்டர் + முக்குலத்தோர் வாக்குகள் தவெகவுக்கு திரும்பத் தொடங்கினால், 2026 தேர்தல் கணக்கே மாறிவிடும்.அடுத்த சில மாதங்களில் கூட்டணிகள் எப்படி மாறுகின்றன என்பதே, இந்த கணக்கின் இறுதியை தீர்மானிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK vs Tvk in Tamil Nadu politics OPS joins hands with TTV through Sengottaiyan Will Vijay win over Kongu Delta votes


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?


செய்திகள்



Seithipunal
--> -->