தமிழக முதல்வர் குறித்து அவதூறு.. திமுக பிரமுகர் கைது..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை பகுதியை சார்ந்தவர் மகிந்திரன் பழனிச்சாமி. இவர் திராவிட முன்னேற்ற கழகத்தில் ஈரோடு மாவட்ட பிரதிநிதியாக இருந்து வருகிறார். இவரது பெயரில் முகநூல் கணக்கை துவங்கி, நிர்வகித்து வருகிறார். 

இந்நிலையில், சம்பவத்தன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்று கூறி முகநூலில் பதிவு செய்துள்ளார். இதனைக்கண்ட அதிமுக கட்சியினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். 

பின்னர் இது குறித்து சென்னிமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மகிந்திரன் பழனிசாமியை கைது செய்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Party Erode member share False info about Tamilnadu CM Police arrest


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->