புறக்கணிக்கப்பட்ட தமிழ்நாடு: போராட்டத்திற்கு நாள் குறித்த தி.மு.க. எம்.பி.க்கள்!  - Seithipunal
Seithipunal


மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு மக்களின் நலனை முழுமையாக புறக்கணித்து தமிழ்நாடு வளர்ச்சிக்கு அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையை தயாரித்துள்ளார். 

இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள். 

மேலும் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு முன்பு கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் நடத்துவார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தி.மு.க எம்பிகள் பிப்ரவரி 8 ஆம் தேதி பாராளுமன்ற வளாகத்தில் காந்தியடிகள் சிலைக்கு முன்பு போராட்டம் நடந்த உள்ளனர். 

இந்த போராட்டம், பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும் வெள்ள நிவாரணம் வழங்காததை கண்டித்தும் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MPs protest February 8th


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->