#Breaking: தி.மு.க எம்.எல்.ஏ பாஜகவில் அதிகாரபூர்வ ஐக்கியம்.. கண்ணீரில் தி.மு.க..!! - Seithipunal
Seithipunal


சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இன்று மாலை டெல்லியில் ஜே.பி.நட்டா தலைமையில் அவர் பாஜகவில் இணைய உள்ளார். மாலை 4.30 மணிக்கு ஜே.பி.நட்டாவை சந்திக்க இருப்பதாக கூறப்பட்டது.

திமுக சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான ஜெ.அன்பழகன் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஜூன் மாதம் பத்தாம் தேதி உயிரிழந்தார். சென்னை மேற்குமாவட்ட செயலாளர் பதவி, அன்பழகன் மறைவிற்கு பிறகு தனக்கு வரும் என எதிர்பார்த்த வேளையில், உதயநிதியின் ஆதரவு பெற்ற சிற்றரசுக்கு கொடுக்கப்பட்டது. 

சீனியர்கள் பலர் இருக்கையில் சிற்றரசு நியமிக்கப்பட்டதால் கட்சியின் மூத்த நிர்வாகி சிலர் கடுமையான அதிர்ச்சி அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் தான் கு.க.செல்வம் டெல்லியில் இன்று மாலை பாஜக தலைவர் நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியது. 

அவர் திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கு.க.செல்வம், 1997ல் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தவர். இந்நிலையில், தற்போது டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா முன்னிலையில் கு.க செல்வம் பாஜகவில் இணைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA Join BJP Officially


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->